தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், நடிகை அனுஷ்காவிற்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் அருந்ததி, இந்த திரைப்படத்தில் தனது திறமையான நடிப்பால் மிரட்டலான தோற்றத்தாலும் ஏராளமான ரசிகர்களின் மனதில் குடிகொண்டார்.

அருந்ததி திரைப்படத்தில் குட்டி அனுஷ்கா நடித்தவர் திவ்யா நாகேஷ் இவர் மும்பையில் பிறந்தவர், தனது சிறு வயதிலேயே சென்னையில் வந்து செட்டில் ஆனார், திருச்சியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் படிக்கும் பொழுது அண்ணனுடன் கிரிக்கெட் கோச்சிங் சென்றுள்ளார், ஒரு நாள் காய்ச்சல் ஏற்பட்டதால் மைதானத்தில் அமர்ந்துள்ளார் அப்பொழுது அங்கு தெலுங்கு சீரியல் சூட்டிங் நடைபெற்றது.

திவ்யாவை பார்த்த தெலுங்கு சீரியல் இயக்குனர் நடிக்க சம்மதமா என கேட்டுள்ளார் தொடர்ந்து திவ்யாவின் பெற்றோரிடமும் அவர் சம்மதம் வாங்கினார், பின்பு தெலுங்கு மற்றும் தமிழ் விளம்பர படங்களில் நடித்து வந்தார், அதன் பின்பு தமிழில் அந்நியன் படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்திருந்தார் அது மட்டுமில்லாமல் அது ஒரு கனாக்காலம், ஜில்லுனு ஒரு காதல் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இதுவரை இவர் 40 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ஹீரோயினாக நடித்தாலும் அவரால் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியவில்லை, தமிழில் கடைசியாக தேடினேன் என்ற திரைப்படத்திலும் தெலுங்கில் வாஸ்தவம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்,ஆனால் திவ்யாவுக்கு இன்னும் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
