சமூக வலைத்தளத்தினால் பயந்து போய் இருக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.!!

0

Actress Anupama Parameswaran is scared of social media: நடிகை அனுபமா பரமேஸ்வரன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் தமிழில் கொடி என்ற திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமானார். இதற்குமுன் மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தில்  நடித்ததன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும் தற்போது இவர் நடிகர் அதர்வாவுடன் சேர்ந்து தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினால் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர், நடிகைகள் தங்களது சமூக வலைதளபக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் குறைந்து வருவதால் போட்டோ ஷூட் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட விரும்புகிறார். அந்த வகையில் நடிகை அனுபமா தனது புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார். ஆனால் அதே சமயம் தற்போது புகைப்படங்களை பதிவிடுவதற்கு பயமாக உள்ளது என கூறியுள்ளார்.

அவர் சமூக வலைத்தளங்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது நல்ல ஒரு புகைப்படங்களை பதிவிட்டால் கூட அதை மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி பதிவிட்டு விடுகின்றனர். இந்த விஷயத்தில் நான் ரொம்பவே பாதிக்கப்பட்டுளளேன் என அவர் கவலையுடன் கூறினார்.