என்னுடைய காதல் இப்படிதான் ப்ரேக்கப் ஆனது உண்மையை ஓப்பனாக போட்டு உடைத்த அனுபமா பரமேஸ்வரன்.!

0

மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் பெற்ற பிரேமம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது தமிழ்,தெலுங்கு, கன்னடம் போன்றவற்றில் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

இதனைத் தொடர்ந்து தமிழில் இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்பொழுது இவர் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தை ஆர் கண்ணன் இயக்கியுள்ளார் இத்திரைப்படத்தின் முழு படப்பிடிப்பு எப்பொழுதும் முடிந்த நிலையில் கொரோனாவின் காரணமாக தற்போது வரையிலும் வெளிவராமல் இருக்கிறது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவரும் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது மற்றும் ரசிகர்களிடம் லைட் சாட்டில் பேசுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதோடு தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கும் சளிக்காமல் பதில் அளித்து வருகிறார்.

anupama
anupama

அந்த வகையில் ரசிகர் ஒருவர் சமீபத்தில் உங்கள் நிஜ வாழ்க்கையில் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு அனுபமா பரமேஸ்வரன் ஆம், நான் ஒருவரை காதலித்து இருக்கிறேன். ஆனால், இந்தக் காதல் ரொம்ப நாள் நீடிக்கவில்லை. அது தோல்வியடைந்து விட்டது தற்பொழுது நான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறி உள்ளார்.

இவ்வாறு ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு மறைக்காமல் பதில் கூறி உள்ளதால் பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள். அதோடு இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.