தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அரபிக்குத்துப் பாடலுக்கு நடனமாடிய அனுபமா பரமேஸ்வரன்.! வைரலாகும் வீடியோ.

0

பொதுவாக விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அதோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இவரின் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே போல் அவரின் திரைப்படங்கள் இடம் பெறும் பாடலுக்கும் தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

அந்தவகையில் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்து வந்திருந்த நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் பீஸ்ட்.இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவை விமர்சனத்தை பெற்று வந்தாலும் நல்ல வசூலை செய்து வருகிறது.

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன், விடிவி,கணேஷ், யோகிபாபு,அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி தவிர இன்னும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஆரம்பிக்குது பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த வரிகள் பெரிதளவில் ரசிகர்கள் புரியவில்லை என்று கூறி வந்தாலும் 300 மில்லியன் வீயூஸை இந்த பாடல் கடந்துள்ளது. இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுத அனிருத் இசை அமைத்து ஜோனியா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார்.

எனவே இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றதால் ரசிகர்கள் முதல் முன்னணி நடிகர் நடிகைகள் வரை அனைவரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்கள். அந்த வகையில் நடிகை சமந்தா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் அட்லி,பாடகி ஜொனிதா காந்தி, நடிகை வேதிகா, நெல்சன் மகன்,திவ்யபாரதி, சஞ்சனா,ஷிவானி நாராயணன்,கீர்த்தி சுரேஷ், கனிகா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட ஏராளமான நடிகை நடிகர்கள் நடனமாடிய நிலையில் தற்போது பூமியில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இந்த பாடலுக்கு நடனம் ஆடிவுள்ளார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த பாடலுக்கு நடனம் ஆடியதால்  தமிழ் பெண் போல் மிகவும் அழகாக ரசிகர்களை கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த நடனம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.