பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நடிகை அஞ்சலி.! அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது நடிகை அஞ்சலி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள ப்ரோமோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவரும் நடிகை அஞ்சலி ஆரம்ப காலகட்டத்தில் விளம்பர திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

பிறகு 2007ஆம் ஆண்டு இயக்குனர் ரா ம் இயக்கத்தில் வெளிவந்த ஜீவா நடிப்பில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் தொடர்ந்து சில திரைப்படங்களில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார். இப்படிப்பட்ட நிலையில் சினிமாவில் மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் தற்பொழுது பிரம்மாண்ட சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்சி 15 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் ராம்சரண் நடித்த வருகிறார்.

மேலும் அஞ்சலி திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரியலிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் தற்பொழுது நடிகை அஞ்சலி ஃபால் என்ற வெப் சீரியலில் நடித்துள்ளார் இதில் எஸ்.பி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், பூர்ணிமா பிரகாஷ்ராஜ் ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

anjali
anjali

அதாவது தற்கொலை முயற்சிக்குப் பின் 24 மணி நேரம் நினைவில் இல்லாத ஒரு இளம் பெண்ணின் கதையை மையமாக வைத்து இந்த தொடர் உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்பொழுது தமிழிலும் உருவாகியுள்ள இந்தத் தொடர் வெர்டிஜ் எனும் வெப் சீரியலின் அதிகாரப்பூர்வ தருவதாகும். மேலும் இந்த தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் மராத்திய உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்காக அஞ்சலி பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். இவ்வாறு அஞ்சலி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னாடி நடிக்க என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment