தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது அதனை தொடர்ந்து ஆயுதம் செய்வோம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பின்பு அங்காடித்தெரு என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். அந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் அதனால் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அஞ்சலி நடித்த திரைப்படங்களான மங்காத்தா. எங்கேயும் எப்போதும், சேட்டை ஆகிய திரைப்படங்கள் இவருக்கு ஓரளவு பலத்தை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் பூச்சாண்டி, ஆனந்த பைரவி ஷிவப்பா பிஸ்மா பாவே உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை அஞ்சலி சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர்.
அந்த வகையில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் பாவாடை சட்டையில் ராட்டினம் போல் சுற்றி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவை ரசிகர்கள் ரசித்து பதிவுகளை பறக்கவிட்டு வருகிறார்கள்.
You decide your vibe 🧿 #sundayvibes #lifeisgood pic.twitter.com/ivMQ6MTSe2
— Anjali (@yoursanjali) February 21, 2021