actress anitha sambath latest chat: பொதுவாக சினிமாவில் புதுமுகமாக அறிமுகமாகும் நடிகைகளை எப்படியாவது படுக்கைக்கு கொண்டு வர வேண்டும் என பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் திட்டம் போடுவது உண்டு. அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் நடிகையாகவும் இருந்து வருவதுதான் அனிதா சம்பத்.
இவரிடம் ஒருவர் தற்போது வசமாக சிக்கி விட்டார். பொதுவாக பட வாய்ப்பு தருகிறேன் என்று நடிகைகளை படுக்கைக்கு அழைத்துச் சென்று விட்டு ஏமாற்றும் கதைகளை நாம் ஏற்கனவே பார்த்திருக்கோம். இதேபோன்ற நிகழ்வு பல நடிகைகளுக்கும் நடந்துள்ளதாக மீடியா முன்பு கதறி உள்ளார்கள்.
அந்த வகையில் தற்போது சினிமாவில் சிறு சிறு வேலை செய்து கொண்டிருக்கும் பலரும் நடிகைகளுக்கு வாய்ப்பு தருவதாக சொல்லி தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் திரைப்படத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யும் வேலை செய்து வருகிறேன் என்று ஒருவர் கூறி ஒரு இளம்பெண்ணை படுக்கைக்கு அழைத்து உள்ளார்.
இவ்வாறு அவர் அழைத்ததை அனிதா சம்பத்திற்கு ஃபார்வர்ட் செய்து உள்ளார் ஆனால் அனிதா சம்பத் அவற்றைப் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் அவற்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இவ்வாறு புதிய பட வாய்ப்பு தருகிறேன் என பல பெண்களை இப்படி ஏமாற்றி வருகிறார்கள் இது பொய்யான ஒன்று இதை நம்பி யாரும் மோசம் போய் விட வேண்டாம் என அனிதா சம்பத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தனது தெளிவாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அனிதா சம்பத் மிக தைரியமாக இதை பகிர்ந்து அதன் காரணமாக ரசிகர்கள் அவரை சிங்கப்பெண்ணே என கொண்டாடி வருகிறார்கள்.
