இளவரசியாக மாறிய நடிகை அனிகா.! ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் புகைப்படம்

anikha : தென்னிந்திய சினிமா உலகில் இன்று பிரபலமான நடிகையாக வருவர் அனிகா.  முதலில் குழந்தை நட்சத்திரமாக விளம்பர படங்கள் மற்றும் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த நடிகை அனிகாவுக்கு தமிழ் சினிமா பெரிய அந்தஸ்தை கொடுத்தது.

அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்து பெயரையும், புகழையும் உயர்த்திக்கொண்டார். அதன் பிறகு தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும்  அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்தது அனைத்திலும் திறமையாக நடித்து வந்த நடிகை அனிகாவுக்கு திடீரென ஹீரோயின் அவதாரமும் எடுத்தார்.

அப்படி இவர் கடைசியாக நடித்த ஓ மை டார்லிங் படம்  வெளிவந்து சுமாரான வரவேற்பையே பெற்றது. படத்தின் பல காட்களில் அனிகா லிப் லாக் அடித்தது வைரலாகின. ஒரு கட்டத்தில் இவருக்கு ரசிகர்களும் உருவாகினர். அவர்களை தகவைத்துக்கொள்ள தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டார்.

ஆரம்பத்தில் இழுத்து போர்த்திக் கொண்டு விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகா திடீரென கிளாமரில் இறங்கி அடிக்க ஆரம்பித்தார் அதுவும் நயன்தாரா போலவே இவரும் டிரஸ் அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறின.

இந்த நிலையில் நடிகை அனிகா இளவரசி கெட்டப்பில் செம்ம அழகாக இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் நீங்க எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அது வைரல்தான் எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் இளவரசி கெட்டப்பில் அசத்தும் அனிகாவை..

anikha
anikha

Leave a Comment

Exit mobile version