ஆண்ட்ரியா உடன் நடித்த விவேக் புகைப்படத்தை வெளியிட்டு இரங்கல் தெரிவித்த நடிகை.!

திரை உலகில் சக நடிகர்களும் தனது நண்பர்களாக பாவித்து அவர்களுக்கும் எப்படி சினிமாவில் முன்னேற வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது அனுபவத்தின் மூலம் எடுத்துக் கூறி அவர்களுக்கும் நல்ல விதையை விதைத்தவர் நடிகர் விவேக்.

அதுமட்டுமில்லாமல் மக்களுக்காக விழிப்புணர்வு, சமூக அக்கறையுள்ள கருத்துக்களையும் கூறி அவர்களையும் ஒன்று சேர்க்க பாடுபட்டவர் நடிகர் விவேக் அதோடு மட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் எப்போதும் இயற்கை வளத்துடன் வலம்வர வீட்டிற்கு வீடு மரக்கன்றுகளை நட வலியுறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தன்னை மறந்து மக்களுக்காக பாடுபட்டவர். இவரின் இறப்பு தமிழ் சினிமாவில் ஈடு செய்ய முடியாத ஒன்று. ஒரு நல்ல மனிதர் இவ்வளவு விரைவிலேயே நம்மை விட்டு சென்றது நம்மை பெரிதும் பாதித்துள்ளது கண்கலங்கி நிற்கின்றனர்.

அவர் மறைந்த பிறகு அவரைப் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவந்து வண்ணம் இருக்கின்றன அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா இவருடன் பெரும்பாலும் நடிக்காவிட்டாலும் விளம்பர படம் ஒன்றில் நடிகர் விவேக்குடன் ஆரம்பத்தில் ஆண்ட்ரியா “மிராண்டா கூல்ட்ரிங்ஸ்” விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இதில் ஆண்ட்ரியா குண்டாக கொழுக்மொழுக் என்று இருந்தார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஆண்ட்ரியா இந்த புகைப்படத்தை பகிர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment