த்ரில்லரில் மிரட்டும் நடிகை ஆண்ட்ரியாவின் கா டீசர்.!!

0

Actress Andrea’s Ka Teaser In Thriller: தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் கமலஹாசன் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார்.மேலும் இதை தொடர்ந்து இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தரமணி, ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் பாடுவது மட்டுமல்லாமல் நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்து வருகிறார்.

இயக்குனர் நாஞ்சில் இயக்கத்தில் வெளியாக உள்ள கா திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரில்லர் திரைப்படமாகும். மேலும் இந்த திரைப்படத்தில் பாடல்கள் கிடையாது என ஏற்கனவே இயக்குனர் அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா படம் முழுவதும் ஒரே காஸ்ட்யூமில் தான் இருப்பார் என கூறியிருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த டீசரை பார்த்தால் சஸ்பென்ஸ் காட்சிகள் அதிகம் நிறைந்த திரைப்படமாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. இப்படத்திற்கு சுந்தர் சி பாபு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை ஷாலோம் ஸ்டூடியோஸ் பேனரின் கீழ் ஜான் மேக்ஸ் தயாரித்துள்ளார்.

தற்போது ஆண்ட்ரியா நடித்த கா திரைப்படத்தின் டீசர் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த டீசர்.