சம்பளத்தை உயர்த்திய நடிகை ஆண்ட்ரியா தெறித்து ஓடும் இயக்குனர்கள்.! கதை முக்கியம் இல்ல.. பணம் தான் முக்கியம்.

0
andrea
andrea

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் ஆண்ட்ரியா. ஆள் பார்ப்பதற்கு அழகாக செம ஸ்லிமாக இருந்ததால் வாய்ப்புகள் குவிந்தன இருப்பினும் ஆரம்பத்தில் படங்களில் நடிப்பதை தவிர்த்தார் ஆனால் தொடர்ந்து தமிழ் சினிமா இவருக்கு நல்ல கதைகளை கொடுக்க வேறு வழியின்றி நடிக்க தொடங்கினார்.

முதலில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் அதன் பின் தான் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் வெற்றியை ருசிக்கிறதோ இல்லையோ தன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேச வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு பொறுமையாக நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்க ஆரம்பித்தார் ஆண்ட்ரியா.

அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை, மங்காத்தா, அரண்மனை, வலியவன், துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்து மிரட்டினார் தற்பொழுது கூட இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கூட நிறைய இருக்கின்றன.

பிசாசு 2, அனல் மேலே பனித்துளி, வட்டம், மாளிகை என சொல்லிக்கொண்டு போகலாம் இந்த ஆண்டில் நிறைய படங்கள் கைவசம் இருக்கிறது இருப்பினும் இதில் பெரிய அளவு எதிர்பார்க்கப்படும் திரைப்படம் பிசாசு 2 இந்த படத்தை விஷ்ணு இயக்கி உள்ளார் ஆண்ட்ரியா இந்த படத்திற்காக  ரொம்ப மெனக்கெட்டு நடித்துள்ளாராம்.

இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசிக்கும் என ஆண்ட்ரியாவும், மிஸ்கிங்கும் நம்பி உள்ளனர் மேலும் பிசாசு 2 படத்திற்கு பிறகு நடிகை ஆண்ட்ரியா புதிய படங்களில் நடிக்க உள்ளார். கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் முதலில் கதையை கேட்காமல் தனது சம்பளத்தை சொல்லி விடுகிறாராம் ஆம் தற்பொழுது ஒரு படத்திற்கு சுமார் 1.5 கோடி சம்பளம் கேட்கிறாராம்.