சினிமா உலகில் ஒரு நடிகை வெற்றிபெற முதலில் கமர்ஷியல் படங்களில் வெற்றி பெற்று பின் டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி உச்சத்தை தொடுவது வழக்கம் ஆனால் ஒரு சில நடிகைகள் நடிக்கின்ற படம் நம்மை திருப்திப்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதால் அதற்கு முழு திறைமையையும் வெளிக்காட்டி நடிப்பார்கள் அந்த படம் வெற்றி அடைந்தால் போதும் அவர்களுக்கான வெற்றியாக நினைப்பவர்கள். மேலும் அவர்கள் வித்தியாசமான படங்களிலும் நடித்து தனக்கான இடத்தை பிடிப்பார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின்னர் நடிகையாக மாறிய ஆண்ட்ரியா தற்போது சினிமா உலகில் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் அவருக்கான அங்கீகாரம் தமிழ் சினிமாவில் மிக சிறப்பாக இருப்பதோடு வித்தியாசமான படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. ஆண்ட்ரியா நடித்துள்ள பெரும்பாலான படங்களில் அவரது கேரக்டர் தனித்துவமாக தெரியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அது போல இவர் பெரிதும் எதிர்பார்த்த மாஸ்டர் திரைப்படம் இவருக்கு சரியான அங்கீகாரத்தை கொடுக்காததால் மிகப்பெரிய அப்செட் ஆனார் ஆனால் அதை தொடர்ந்து தற்போது இவர் நடித்து முடித்துள்ள பிசாசு இரண்டாம் பாகம் படத்தில் நடித்து முடித்துள்ளார் படம் வேற லெவலில் இருப்பதாக சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.
பிசாசு முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது இந்த படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறார் மற்றும் பூர்ணா முக்கிய கேரக்டரில் பின்னி பெடல் எடுத்து உள்ளார். இது குறித்து இயக்குனர் கூறியது.
பிசாசு படத்தில் பிசாசு தான் முக்கிய கேரக்டர் அது போல இந்த படத்திலும் பிசாசு தான் முக்கிய கேரக்டர் இதில் அன்பு, பாசம், கருணை, சின்னதாக ஒரு மெசேஜ் ஆகியவை இடம்பெற்றிருக்கும் இது தவிர இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை ஆனால் இரண்டு கதைகளும் வெவ்வேறு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ரியா பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களில் நடித்துள்ளார் அதைவிட இது முக்கியமான படமாக ஆண்ட்ரியாவுக்கு அமையும் அந்த அளவிற்கு கஷ்டப்பட்டு நடித்துள்ளார் மேலும் சொல்லப்போனால் நானே இந்த திரைப்படத்திற்காக அவரை பெரிய அளவில் கஷ்டப்படுகிறேன் என்று சொல்லலாம்.
இந்தப் படம் நிச்சயம் பயமுறுத்தும் ஒரு பேய் படம் இதில் திகில் நிறைய இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.