நடிகை ஆண்ட்ரியா ஹீரோயின்னாக நடிப்பதை தாண்டி பல படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.! எந்தெந்த நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார் தெரியுமா.? லிஸ்ட் இதோ.

0

தமிழ் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது நடிகை  ஆண்ட்ரியாவுக்கு மிகவும் பிடிக்கும் இந்த காரணத்தினால் தான் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை வெகு விரைவிலேயே பெற்றார். படத்தின் கதையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார்.

மேலும் அது ஹீரோயின் கதா பாத்திரத்தையும் தாண்டி வலுவான கதாபாத்திரம் இருந்தால் அந்த கதாபாத்திரம்தான் வேண்டும் என்று கூறி நடிப்பது அவரது ஸ்டைல். டாப் நடிகர்கள் பல்வேறு படங்களில் ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் தாண்டி குணச்சித்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அந்தவகையில் வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம், மாஸ்டர் போன்ற அனைத்து படங்களிலும் ஹீரோயின் என்ற அந்தஸ்த்தையும் தாண்டி வித்தியாசமான ரோலில் நடித்து மக்களுக்கு விருந்து கொடுத்திருப்பார். இந்த காரணத்தினால் தற்போது ஆண்ட்ரியாவுக்கு பட வாய்ப்பு கொடுக்க தற்போது தமிழ் சினிமா அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது கூட மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் பல்வேறு படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் தாண்டியே பாட்டு பாடுவது, டப்பிங் செய்வதும் ஆண்ட்ரியாவுக்கு கைவந்த கலை. இதுவரை அவர் பல்வேறு விதமான டாப் நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் அந்தவகையில் ஆண்ட்ரியா வேட்டையாடு விளையாடு படத்தில் கமலினி முகர்ஜிக்கு டப்பிங் செய்து உள்ளார்.

தங்க மகன் படத்தில் எமிஜாக்சன், நண்பன் இலியானா, ஆடுகளம் டாப்ஸி, அவெஞ்சர் பிளாக் விடோ போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த காரணத்தினால் தான் ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் எப்போதும் பேசும் பொருளாக இருப்பதோடு ஆக்டிவ்வாக இருக்கும் நடிகையாக ஆண்ட்ரியா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.