பிசாசு 2 படதிற்காக நடிகை ஆண்ட்ரியா.. இந்த பொக்கிஷத்தை அவர் அடையவேண்டும் – இயக்குனர் மிஷ்கின் அதிரடி.

pisasu
pisasu

சினிமா உலகில் வெற்றி கொடுக்கும் இயக்குனர்களை கூட நாம் அவ்வளவு எளிதில் தூக்கி கொண்டாட மாட்டோம். படம் வசூல் வேட்டை நடத்தி விட்டாலும் மக்களிடத்தில் அந்தப்படம் பேசுபொருளாக அமைந்துவிட்டால் அந்த இயக்குனரும் வரவேற்ப்பை மக்கள் நன்றாக கொடுப்பார்கள்

அந்தவகையில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ போன்ற வெற்றி படங்களை கொடுத்த மிஷ்கின் தற்போது தமிழ்சினிமாவில் உச்சத்தை நோக்கி முன்னேறுகிறார்.

இவரது இயக்கத்தில் வெளியான பிசாசு திரைப்படம் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக அமைந்ததோடு ஓரளவு லாபத்தை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்து வருகிறார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா பின்னி பெடல் எடுத்து உள்ளார் மேலும் கௌரவ வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை தற்போது தாறுமாறாக எகிற வைத்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் ரசிகர்களுடன் உரையாடும் பொழுது பிசாசு படம் குறித்தும் ஆண்ட்ரியா குறித்தும் சில சுவாரஸ்யமான சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார் அவர் கூறியது.

இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா சிறப்பாக நடித்துள்ளதாகவும் இந்த படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் எனவும் குறிப்பிட்டார். இயக்குனர்  இதற்கு முன்பு இந்தத் திரைப்படத்திற்காக நடிகை ஆண்ட்ரியாவை நான் ரொம்ப கஷ்ட படுத்தி விட்டேன் என ஓபனாக சொன்னார் என்பதும் குறிப்பிடத்தக்கது.