actress anandhi latest speech viral in social media: சமீபத்தில் நடிகை ஒருவர் இறந்து போன தனது அப்பாவை பார்க்க செல்லும் பொழுது பாட்டு கேட்டுக்கொண்டு நெய் ரோஸ்ட் சாப்பிட்டு போனதாக கூரிய வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு அவர் வெளியிட்ட வீடியோவானது ரசிகர்களை கடுப்பாக்கிய மட்டுமல்லாமல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி விட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தில் மூலமாக ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் தான் ஆனந்தி இவர் நடிகை மட்டுமல்லாமல் ஆர்ஜே வாகவும் பணியாற்றியுள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா, காஜல் அகர்வால் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் யோகி பாபுவின் மனைவியாகவும் ஜெயம் ரவிக்கு தங்கையாகவும் நடித்தவர்தான் நமது ஆனந்தி இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப் படத்திலும் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
நமது நடிகை திரைப்படத்தில் நடிப்பதை விட அதிகமாக புத்தகம் படிப்பது தான் அதிகம் இவர் ஒரு புத்தகப் பிரியர் அந்த வகையில் பிரபல தி புக் ஷோ என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறாராம். மேலும் இந்த யூடியூப் சேனலை 2.5 லட்சம் நபர்கள் லைக் செய்துள்ளதாகவும் பின்தொடர்வதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நமது நடிகை புத்தகம் படிப்பதனால் என்னுடைய தந்தையின் மரணம் அன்று தான் நடந்துகொண்ட விதத்தை கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறியதை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டார்கள்.
ஏனெனில் அவர் சென்னையில் இருந்து தன்னுடைய இறந்துபோன அப்பாவின் உடலைப் பார்க்க கோயம்புத்தூருக்கு செல்லும் பொழுது தனக்கு பிடித்த அனைத்து பாடல்களையும் கேட்டுக்கொண்டே சென்றாராம். அது மட்டும் இல்லாமல் போகும் வழியில் ஒரு ஹோட்டலில் சூடான நெய் ரோஸ்ட் ஆர்டர் செய்து சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார்
இவ்வாறு அவருடைய அப்பாவை போய் நேரில் சென்று பார்த்த பொழுது அவருக்கு எதுவுமே தோன்றவில்லை இது ஒரு இயற்கை என்று தான் உணர்ந்தாரம் அதுமட்டுமில்லாமல் தனக்கும் இந்த சூழல் ஏற்படும். என்று கூறியது மட்டுமல்லாமல் அவருடைய சடங்கு செய்யும் பொழுது மழைத்துளி தோன்றியது ஆனால் அதை என்னால் ரசிக்க முடிந்தது ஆனால் என்னுடைய தந்தையால் உணர முடியவில்லை என கூரியிருந்தார்.
புத்தக வாசிப்பு போதையாகி போககூடாதுங்குரதுக்கு இது ஒரு எ.கா..!! 😌👎
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன..!🙌 pic.twitter.com/BDsXShtkqa
— பைலட் ™🚀(space ship ) (@kingof_asgard) June 14, 2021
இவ்வாறு தந்தையின் மரணத்தை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் தத்துவம் பேசிய நமது ஆனந்தியை இணையத்தில் ரசிகர்கள் பொலந்து கட்டி வருகிறார்கள்
மரணம் என்பது ஒரு மறைபொருள். என்றைக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாது. தந்தை இறக்கும் செய்திகேட்டும் பாடலை ரசித்ததாம், நிலவை ரசித்ததாம். இழப்பின் வலியை உணராவிடில் இது என்ன ஜென்மம். துன்பத்தில் துவளாத மனம் இருக்கலாம். ஆனால் அந்த துன்பத்தையே உணராத மனம் எப்படிப்பட்டதாக இருக்கும்.
— Muthu Maileru (@MMaileru) June 14, 2021