கேப்டன் மேல இப்பதான் பாசம் பொத்துகிட்டு வருதா விஜயயை வம்பிழுக்கும் நடிகை அம்பிகா.!

விஜய் தற்பொழுது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் இவரின் கடைசி படம் ஜனநாயகம் இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 9-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. விஜயின் அரசியல் பயணத்தில் பல சினிமா பிரபலங்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்.

அதே போல் அவருக்கு அகெய்ன்ஸ்ட்டாக ஒரு சில சினிமா நடிகர்களும் இருக்கிறார்கள் இந்த நிலையில் முன்னாள் நடிகை அம்பிகா பேசியது சமூக வலைதளத்தில் பேச்சு பொருளாக இருந்து வருகிறது அவர் பேசியதாவது.

வார்த்தைக்கு வார்த்தை மேடையில அண்ணன் விஜயகாந்த் அண்ணன் விஜயகாந்த் என சொல்லுறீங்களே அப்ப அவர் பையனுக்கு ஒரு படம் செய்து கொடுத்திருக்கலாமே, அண்ணன் அண்ணன்னு சொல்லிட்டு இதெல்லாம் ஏன் செய்யவில்லை.

இப்ப மட்டும் என்ன திடீர்னு பாசம் பொத்துகிட்டு வருது அப்போ விஜய்யும் மற்ற அரசியல்வாதி மாதிரி நாடகம் ஆடுகிறாரா காரியம் ஆக மட்டும் உங்களுக்கு விஜயகாந்த் அண்ணன் தேவைப்படுகிறாரா நடிகை அம்பிகா.