2வது திருமணம் முடிந்த கையோடு வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்?

Actress Amala Paul: நடிகை அமலாபால் தனது காதல் கணவருடன் வளைகாப்பு நிகழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அமலாபால் தொடர்பு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

இதன் மூலம் பல ஹிட் திரைப்படங்களையும் கொடுத்திருக்கும் நிலையில் சமீப காலங்களாக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் அமலா பால் தான் எங்கு சென்றாலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

நடிகை அமலா பால் தனது திரை வாழ்க்கையில் பல வெற்றிகளை சந்தித்தாலும் பர்சனல் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார். அப்படி துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் போது இப்படத்தின் இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

AMALA PAUL
AMALA PAUL

திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததால் குறுகிய காலத்திலே விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்து பிசியாக இருந்து வந்த அமலா பால் சமீபத்தில் தனது நெருங்கிய நண்பரை திருமணம் செய்து கொண்டார்.

AMALA PAUL
AMALA PAUL

அமலாபாலின் பிறந்தநாள் அன்று அவருடைய நண்பர் தனது ப்ரொபோசல் கூறிய வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு குடும்பத்தினர்கள் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் நடைபெற்று முடிந்தது.

AMALA PAUL
AMALA PAUL

இந்நிலையில் அமலா பால் தனது நெருங்கிய தோழியான மலையாள நடிகை ஒருவரின் பேபி ஷவருக்கு தனது கணவருடன் சென்றுள்ளார். அப்பொழுது அமலா பால் மகிழ்ச்சியாக அனைவருடனும் இருந்துள்ளார். அப்படி இவருடைய அழகிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.