குரங்கை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு செல்பி எடுத்த நடிகை அமலாபால்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அமலாபால் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை அடுத்த தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

அந்த வகையில் அமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக விஜயுடன் தலைவா, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி, விக்ரமுடன் தெய்வத்திருமகள் போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்று தந்தது.

இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான இவர் பிறகு தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் அம்மா கணக்கு, ஆடை, கடாவர், டீச்சர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

இதற்கிடையில் இயக்குனர் ஏஎல் விஜய் அவர்களை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒரே வருடத்தில் பிரிந்தனர். இவர்களுடைய விவாகரத்திற்கு பிறகு தான் அமலா பால் கவர்ச்சியில் அதிக ஆர்வத்தை காமித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.

amala baul
amala baul

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை அமலா பால் பாடகர் பவித்தர் சிங்கை திருமணம் செய்து கொண்ட நிலையில் தன்னுடைய 31வது பிறந்த நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார.  எனவே இதற்காக லண்டனில் சுற்றுலா சென்றுள்ளார் அங்குள்ள டவர் பாலம் சென்று நிலையில் பல விதமான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

amala baul 1
amala baul 1

இதனை அடுத்து தற்பொழுது அதோ அந்தப் பறவை போல, மலையாளத்தில் பிரித்திவிராஜுடன் ஆடு ஜீவிதம், மம்முட்டி நடித்துவரும் கிறிஸ்டோபர், கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் போலா போன்ற திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நிலையில் அதேபோல் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தோனேசியா நாட்டின் Ubud பகுதியில் சுற்றுலா மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு இருக்கும் குரங்கு ஒன்றை தனது மடியில் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment