22 வருடத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில்!! இந்த நடிகருடன் இணையும் ஐஸ்வர்யா ராய்.!!

0

actress aiswaryarai commited in anthathun remake movie with tamil actor: நடிகை ஐஸ்வர்யா ராயும் நடிகர் பிரசாந்தும் இணைந்து நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்த திரைப்படம் ஜீன்ஸ். இந்தத் திரைப்படம் இயக்குனர் ஷங்கர் அவர்களால் 1998ஆம் ஆண்டு இயக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை இன்று நினைத்துப் பார்த்தால் கூட காட்சிகள் கண்ணில் தெரியும் அந்த அளவிற்கு இவர்களின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த திரைப்படத்தில் இவர்கள் இருவருமே இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

அதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் 22 வருடத்திற்கு பிறகு ஐஸ்வர்யாராயும் பிரசாந்தும் இணைந்து ஹிந்தி ரீமேக் திரைப்படமான அந்தாதுன் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்தை பிரசாந்தின் தந்தையாரான தயாரிப்பாளர் தியாகராஜன் தயாரிக்க உள்ளதாக தெரியவருகிறது.

முதலில் இந்த திரைப்படத்தை மோகன் ராஜா அவர்கள் இயக்குவதாக இருந்தது. ஆனால் தற்போது அதில் சிறிது மாற்றம் ஏற்பட்டு பொன்மகள்வந்தாள் திரைப்படத்தை இயக்கிய பிரடரிக் இயக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் தபு நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது இந்த அந்தாதுன் திரைப்படத்தில் மீண்டும் இவர்கள் இணைவதால் இந்த திரைப்படம் பிரசாந்துக்கு ஒரு திருப்புமுனையாக அமையுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.