சினிமாவுலகில் பொருத்தவரை அழகாக இருந்தாலே சினிமா பட வாய்ப்பு கிடைக்கும் என்பது நாம் காலம் காலமாக அறிந்த ஒன்று தான். ஆனால் சினிமா தொடர்ந்து தன்னை தக்க வைத்துக்கொள்ள அதன் பிறகு அவர்கள் சிறப்பான படங்களை தேர்வு செய்து படத்திற்கு ஏற்றவாறு நடித்தால் மட்டுமே அவர்கள் முன்னேற முடியும் என்பது வழக்கம்.
அந்த வகையில் தொகுப்பாளராக பணியாற்றி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து என எல்லாவற்றிலும் சுற்றி திரிந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு கட்டத்தில் முக்கியமான பட வாய்ப்புகள் கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்து தமிழ் சினிமாவில் நிலைத்து நின்றார்.
அந்த வகையில் இவர் வட சென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, க. பெ ரணசிங்கம் போன்ற படங்களில் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மற்ற பிரபல நடிகைகளை ஆச்சரியப்படுத்தினார்.
மேலும் தற்போது தமிழ் சினிமாவில் சைலண்டாக இருந்து கொண்டு அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றிய சிறப்பாக வருகிறார். இவர் நடிக்க உள்ள திரைப்படங்களான இந்தியன் 2, இந்தியன் கிச்சன், மோகன்தாஸ், ஐயப்பன்னும் கோஷியும் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.
இந்த நிலையில் அவரது அண்ணன் மற்றும் அம்மாவுடன் இணைந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
