சிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்து கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.? வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முதலில் வெள்ளி திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அதன் பிறகு சின்ன திரையில் தொகுப்பாளராக சில நிகழ்ச்சிகளை சிறப்பாக வழி நடத்தினார். 2010 ஆம் ஆண்டு “நீதானே அவன்” என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதனை தொடர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரம்மி திரைப்படம் ஒரு நல்ல படமாக அமைந்தது அதன் பின் ஹீரோயின்னாக திருடன் போலீஸ், வடசென்னை, க பே ரணசிங்கம், டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டார்.

இப்பொழுது கூட 2023 ல் கூட ஏகப்பட்ட திரைப்படங்கள் வைத்திருக்கிறார். மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல் போன்ற தமிழ் படங்களில் நடித்த வருகிறார் இது தவிர மலையாளத்தில் இரண்டு, மூன்று படங்கள் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி வெள்ளி திரையில் வெற்றி நடிகையாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

சோசியல் மீடியா பக்கத்தில் மிக ஆக்டிவாக இருக்கக் கூடியவர் ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் அண்மையில் சி எஸ் கே அணி விளையாண்ட மேட்ச்சை பார்க்க ஐஸ்வர்யா ராஜேஷ் மஞ்சள் கலர் டீ சர்ட்டில்  சென்றிருந்தார்.

அப்பொழுது அவர் மேட்சை செம சந்தோஷத்துடன் ரசித்து பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் புகைப்படம் எனக் கூறி கமெண்ட் அடித்து லைக்களை தட்டி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment