தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தன்னுடைய அண்ணனுக்கு ரசிகர்களிடம் ஆதரவு கொடுக்குமாறு கேட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் உலகம் முழுவதும் ஆதரவை பெற்று வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி.
இந்த ரியாலிட்டி ஷோ கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது முதன்முறையாக 20 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி களமிறங்கி இருக்கிறது மேலும் விஜய் டிவி தங்களுடைய டிஆர்பியை ஏற்ற வேண்டும் என்பதற்காக முன்னதாக சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த பிரபலங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய பிரபலங்களை இந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் ஆறாவது பிரபல நடிக ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் கலந்து கொண்டுள்ளார் அதாவது மணிகண்டன் ராஜேஷ் குறித்து அவரது தங்கை உருக்கமான பதிவு வெளியிட்டுள்ள நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறியதாவது, ‘நான் என்னுடைய அண்ணன் மணிகண்டன் புஜ்ஜி என்றுதான் அழைப்பேன் என்னுடைய அண்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அதே சமயம் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன் என் தந்தையின் மறு உருவம் அவன் கண்டிப்பாக சில நாட்கள் வரை பிரிய நேரிடும் நான் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

அதன் பிறகு ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் தயவு செய்து என் சகோதரருக்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார் மேலும் ரசிகர்களும் தொடர்ந்து கண்டிப்பாக ஆதரவு தருவதாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த சீசனில் அமுதவாணன், ஜி பி முத்து, ராபர்ட், ஷெரினா, ஏடிகே, ஜனனி, விஜே மகேஸ்வரி, விஜே கதிரவன், தனலட்சுமி, ரட்சிதா மகாலட்சுமி, மணிகண்டன், மெட்டிஒலி அரவிந்த், அசல் கோளாறு, ராம் ராமசாமி, அசின், விக்ரமன், குயின்ஸ் மற்றும் நிவாஸினி, ஆயிஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்.