விஜய் சின்ன பையன் சார் நமக்கு செட்டாகாது..? அஜித் நடிச்ச எனக்கு ஓகே.! ஒரே போடாக போட்ட பிரபல நடிகை…!

உலக அழகி என்ற அந்தஸ்துடன் வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் முன்னாள் உலக அழகி, ஒரு காலகட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது கட்டுக்குள் வைத்திருந்தார். இவர் தமிழ் சினிமாவில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் ஜீன்ஸ், எந்திரன், ராவணன் என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.

ஆனால் இவர் தமிழை தாண்டி பாலிவுட் படத்தில்  கால் தடம் பதித்தார் பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இன்று பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகு பெரிதும் நடிக்காமல் இருந்த ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் அதுமட்டுமில்லாமல் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

தன்னுடைய மகளுடன் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து ஐஸ்வர்யா ராய் அடிக்கடி பதிவிட்டு வருவது வழக்கம் இந்த வகையில் பலமுறை அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற அதிக லைக் பெற்று வந்தது. இந்த நிலையில் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதளவு பேசப்பட்டது அது மட்டுமில்லாமல் இவர் வரும் ஒவ்வொரு காட்சியும் திரையரங்கில் விசில் பறந்தது இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த இரண்டாவது பாகத்திலும் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கும் நிலையில் விஜய் திரைப்படத்தை ஐஸ்வர்யா ராய் தவிர்த்து உள்ளது மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது தளபதி விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் தமிழன் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படத்தில் முதல் முதலாக ஹீரோயினாக நடிக்க இருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

ஆனால் இந்த திரைப்படத்தில் அவர் நடிக்க மறுத்துள்ளார் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாததற்கு ஒரு காரணம் கூறியதுதான் பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது, அதில் அவர் கூறியதாவது விஜய் என்னை விட சிறியவராக இருக்கிறார் அதனால் அவருக்கும் எனக்கும் ஜோடி செட்டாகாது அஜித் ஹீரோவாக நடித்தால் நான் ஜோடியாக நடிக்கிறேன் என கூறியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்களிடம் இருந்து இதுபோல் பதில் வந்ததால் தமிழன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ராய் ஜோடி சேர மறுத்துள்ளதால் உலக அழகி பட்டம் வென்ற ஒரு நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் உடனே 2000 ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற பிரியங்கா சோப்ராவை தமிழன் திரைப்படத்தில் நடிக்க பட குழு பேச்சுவார்த்தை நடத்தி கடைசியில் நடிக்கவும் வைத்தது.

Leave a Comment

Exit mobile version