தனது அப்பாவின் பாடலுக்கு அழகாக நடனமாடும் ஐஸ்வர்யா அர்ஜுன்.! வைரலாகும் வீடியோ

2013ஆம் ஆண்டு வெளிவந்த பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா இவர் வாரிசு நடிகையாக அறிமுகமானார். அந்த வகையில் இவர் நடிகர் அர்ஜூனின் மகள் ஆவார். இவ்வாறு தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தவர் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் தற்பொழுது பெரிதாக தமிழ் திரைப் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது கொரோனா காரணத்தினால் அனைத்துத் தொழில்களும் முடங்கி உள்ளது.

அந்த வகையில் சின்னத்திரை, வெள்ளித்திரை என்று அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டிலேயே இருக்கும் அனைத்து நடிகைகளும் போரடிக்கிறது என்பதற்காக பொழுதை கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அதோடு தொடர்ந்து பல நடிகைகள் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இவ்வாறு இவர்கள் செய்வதன்மூலம் ரசிகர்களுக்கு நடிகைகளிடம்  நாள்தோறும் பேசுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

அந்த வகையில் ஐஸ்வரியா அர்ஜுன் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.  இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவரின் அப்பாவின் படமான ரிதம் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ரொமாண்டிக்கான பாடல் ஒன்று இருக்கு நடனமாடி உள்ளார்.அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

Leave a Comment

Exit mobile version