மார்க்கெட் இருந்தும் அம்மாவாக நடிக்க அட்வான்ஸ் வாங்கும் நடிகை ஐஸ்வரியா ராஜேஷ்..!

aishwariya-rajesh-2
aishwariya-rajesh-2

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து விட்டு தற்போது பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பொதுவாக நடிகைகள் கதாநாயகியாக நடிக்கும் போது அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பெரிய தொகை யோசிப்பார்கள் ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை என்ற திரைப்படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருப்பார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடத்ததன் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் புகழையும் பாராட்டையும் பெருமளவு பெற்றுவிட்டார்.அந்த வகையில் இத் திரைப்படமானது தேசிய விருது பெற்ற அவருக்கு மேன்மேலும் புகழ் தேடித்தந்தது.

அது மட்டுமில்லாமல் நமது நடிகை திரைப்படத்தில் நாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் துணை கதாபாத்திரத்திலும் பல்வேறு திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த வகையில் சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் கூட சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்து இருப்பார்.

இதே போல தான் மனிதன், சாமி 2, செக்கச் சிவந்த வானம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நமது நடிகை வடசென்னை திரைப்படத்தில் செம மாஸ் ஆன கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.

அந்த வகையில் சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த திட்டம் 2 என்ற திரைப்படமானது இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரவீந்திர பிரசாத் இயக்கத்தில் இவர் நடித்த பூமிகா எந்த திரைப்படமும் விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

மேலும் இது குறித்த ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டியில் பேசியபோது இந்த திரைப்படத்தில் நான் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க இருக்கிறேன் இது போன்று நடிப்பதற்கு எனக்கு எந்த ஒரு கவலையும் வருத்தமும் கிடையாது கதை நன்றாக இருந்தால் நான் நடிக்க ஒப்புக்கொள்வேன் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பார்த்து அதன் பிறகு ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை யாவது நடுவிர்கள் என எண்ணுகிறேன் என்று கூறியுள்ளார்.

ayshwariya rajesh
ayshwariya rajesh