அடடா அதித்தி பாலனா இப்படி செய்தது!! கொடைக்கானலில் அதிகாரிகளுடன் வாக்குவாதம்..

actress adhithi balan: தற்போது கொரோனா வைரஸ் காரணமாக லாக்டவுன் விதிக்கப்பட்டு  பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளதால் அனைவருக்கும் பொருளாதாரப் பிரச்சினை ஏற்பட்டது. அதனை சரிசெய்யும் வண்ணம் தொழிற்சாலை, நிறுவனங்கள், அலுவலகங்கள், சினிமா படப்பிடிப்பு என அனைத்தும் திறக்கப்பட்டது.

பின்னர் அதனைத் தொடர்ந்து தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வீட்டிலிருந்து வெளியே செல்லும் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிந்து செல்லவேண்டும் என்பது அரசின் கட்டளையாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் கொடைக்கானலில் ஏறி சாலை பகுதியில் சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் முககவசமின்றி வெளியே வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்தனர்.  அப்போது அந்த வழியாக காரில் வலம் வரும் பயணிகளை வழிமறித்து விசாரித்தனர்.

அப்படி விசாரித்தபோது அருவி பட நடிகை அதிதி பாலன் அவர்கள் அந்த காரில் முககவசம் இல்லாமல் பயணம் செய்துள்ளார் என தெரிந்ததும்  மருத்துவத் துறையினர் அவருக்கு அபராதம் விதித்தனர். எனவே நடிகை அதிதி பாலன் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு 200 ரூபாய் அபராத பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

Leave a Comment