சிவகார்த்திகேயன் உடன் ‘மனம் கொத்தி பறவை’ படத்தில் நடித்த நடிகையை ஞாபகம் இருக்கிறதா.? வைரல் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் தற்பொழுது பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக சின்னத்திரையில் பணியாற்றி வந்து பிறகு நடிகராக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் 3 மற்றும் மெரினா போன்ற திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் மனம் கொத்தி பறவை என்ற படத்தின் மூலம் தான் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது மேலும் இந்த படத்தின் சிவகார்த்திகேயன் எனக்கு ஜோடியாக நடிப்பை ஆத்மியா நடித்திருந்தார். சிவகார்த்திகேயனுடன் இந்த படத்தில் நடித்த பிறகு பெரிதாக ஆத்மிகாவுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

பிறகு இவர் தமிழில் 2014ஆம் ஆண்டு வெளியான போங்கொடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் நடித்திருந்தார் இந்த படங்கள் சொல்லும் அளவிற்கு இவருக்கு பெரிய ரிச்சை பெற்று தரவில்லை. இவ்வாறு தமிழ் சினிமாவில் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை என்றாலும் மலையாளத்தில் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் நடிகை அத்மியா விஜய் சேதுபதியுடன் இணைந்து மார்க்கோனி மத்தாய் என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் போன்றவை சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது வரையிலும் திரைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆத்மியாவிற்கு கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் முடிந்த நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இவர் தன்னுடைய பெற்றோர் பார்த்து வைத்த பையனை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்பொழுது இவர் சில திரைப்படங்களில் நடித்த கமிட் ஆகியுள்ளாராம். இவ்வாறு திரைப்படங்களில் நடித்த பிசியாக இருந்து வரும் நடிகை ஆத்மியாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment