சினிமாவை நம்பி செய்யும் வேலையை விட்ட நடிகர்கள்.. எந்தெந்த நடிகர் என்ன வேலை செய்தார் தெரியுமா.?

Actors quit their jobs to act in movies: சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையினால் தாங்கள் செய்து வந்த வேலையை விட்டுவிட்டு சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி தற்பொழுது உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருக்கும் பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.

ரஜினிகாந்த்: ரஜினிகாந்த் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர் சென்னைக்கு வாய்ப்பு தேடி வர 1975ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் திரைவுலகிற்கு அறிமுகமானார். ஆரம்ப காலகட்டத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்த இவர் பிறகு ஹீரோவாக அவதாரம் எடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சிம்புவால் சீரழிந்த ஆறு நடிகைகள்… சார்மி முதல் நிதி அகர்வால் வரை இத்தனை நடிகைகளா..

நயன்தாரா: நடிகை நயன்தாரா சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலாக இருந்தார் மேலும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், சில ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். இந்த சூழலில் 2003ஆம் ஆண்டு மலையாளத்தில் நடிகர் ஜெயராம் நடிப்பில் வெளியான மனசினக்கரே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்பொழுது தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார்.

மம்முட்டி: நடிகர் மம்முட்டி நடிக்க வருவதற்கு முன்பு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். பிறகு 1971ஆம் ஆண்டு வெளியான அனுபவங்கள் பாலிச்சகல் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாக இதனை தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மலையாள சூப்பர் ஸ்டாராக உள்ளார்.

ரக்ஷித் ஷெட்டி: நடிகரும் இயக்குனருமான ரக்ஷித் ஷெட்டி சினிமாவிற்கு வருவதற்கு முன் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். பிறகு 2010ஆம் ஆண்டு வெளியான ‘நம்ம் ஏரல் ஒன்ட் தினா’ என்ற படத்தின் மூலம் கன்னட திரை உலகிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். மேலும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

சிம்புவால் சீரழிந்த ஆறு நடிகைகள்… சார்மி முதல் நிதி அகர்வால் வரை இத்தனை நடிகைகளா..

நிவின் பாலி: மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த நிவின் பாலி 2009ஆம் ஆண்டு வெளியான ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ என்ற படத்தில் நடித்தார். பிறகு 2012ல் தட்டத்தின் மறைவு என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய பிரபலத்தை பெற்றார் தற்பொழுது ஏழு காதல் ஏழுமலை படத்தில் நடித்து வருகிறார்.

துல்கர் சல்மான்: நடிகர் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் துபாயில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதன் பிறகு நடிப்பில் ஆர்வம் வந்ததால் 2012ஆம் ஆண்டு வெளியான செகண்ட் ஷோ என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தற்போது வரையிலும் வெற்றி திரைப்படங்களை தந்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது கல்கி பாஸ்கர் என்ற தெலுங்கு படத்திலும், மணிரத்தினம் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப்  படத்திலும் நடித்து வருகிறார்.

Exit mobile version