திறமை இருந்தும் சினிமாவில் சாதிக்கமுடியாமல் போன நடிகர்கள்.! அட லிஸ்டில் இந்த நடிகரும் இருக்காங்களா

தமிழ் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு ஒரு சில பேருக்கு ஈஸியாக கிடைக்கும் ஆனால் ஒரு சில பேருக்கு ரொம்பவும் கஷ்டப்பட்டால்தான் கிடைக்கும். அப்படி ஈசியாகவோ அல்லது கஷ்டப்பட்டோ சினிமா வாய்ப்பை பெற்ற ஹீரோக்கள் தன்னுடைய ஆரம்பகால படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் ஏதாவது ஒரு வகையில் இடம் பிடித்திருப்பார்கள். ஆனால் அதன்பிறகுசரியான கதையை தேர்வு செய்யாததாலும் சரியான நேரத்தில் அவர்களுடைய படம் ரிலீஸ் ஆகாததாலும் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தினாலும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து தற்போது மக்கள் அவர்களை மறந்து போக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அந்த நடிகர்கள் யார் என்றும் அவர்கள் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் என்ன வென்றும் தற்போது நாம் பார்க்கலாம்.

நடிகர் ஷாம் இவர் குஷி திரைப்படத்தில் விஜய்க்கு நண்பராக நடித்துள்ளார். அதன்பிறகு 12பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பாலா, லேசா லேசா, இயற்கை, போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் நன்றாக நடித்த ஷாம் 2013ம் ஆண்டு வெளியான ஆறு மெழுகுவர்த்திகள் என்ற திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்தது மட்டுமல்லாமல் பல நாட்கள் தூங்காமல் இருந்து தன்னுடைய கண்ணை வீங்க வைத்தெல்லாம் நடித்திருந்தார். இத் திரைப்படம் வணிகரீதியாக பெரிதும் வெற்றி கொடுக்கவில்லை அதன் பிறகு காவியன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது இந்த திரைப்படம் வெளியானது சிலருக்கு இன்று வரைக்கும் தெரியாது. இதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக வெளிவராத இவருடைய திரைப்படங்கள் ஏஸ், ராஜா, ராணி, ஜாக்கி மற்றும் ஜோக்கர்  என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

shaam
shaam

ஸ்ரீகாந்த் ரோஜா கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு, போன்ற திரைப்படங்களில் நடித்தஇவர்அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் இவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை, அதுவும் 2016ல் வெளியான சவுகார்பேட்டை, நம்பியார் போன்ற படங்கள்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது.

srikanth
srikanth

நடிகர் ஆதி மிருகம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஈரம் திரைப்படத்தில் மூலம் வெற்றியை பெற்ற நடிகர் ஆதி அடுத்ததாக அவர் நடித்த அய்யனார், ஆடு புலி, அரவான், கோச்சடையான் போன்ற படங்கள் வணிக ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்கவில்லை. இருந்தாலும் இவர் கடைசியாக நடித்த இருந்த மரகத நாணயம், யூட்டேர்ன் போன்ற திரைப்படங்கள் சுமாரான அளவில் வெற்றியை தேடித்தந்தது. இருப்பினும் இவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

aadhi
aadhi

நடிகர் நகுல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், போன்றதிரைப்படங்கள் இவருக்கு ஓரளவு வெற்றியை தேடித்தந்தது.ஆனால் இவர் கடைசியாக நடித்த நாரதன்,பிரம்மா டாட் காம், செய் போன்ற திரைப்படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தது.

நடிகர் பிரசாந்த் இவர் ஒரு காலகட்டத்தில் அஜித், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களுக்கு முன்னாடி இருந்தார். ஆனால் 2003ஆம் ஆண்டுவின்னர் திரைப்படத்தின் பிறகுஅவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அதன்பிறகு 2018 இல் ஜானி என்ற திரைப்படம் வெளியாகியது.

இவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் ஒரு சில நடிகர்கள் திறமை இருந்தும் நடிக்க வாய்ப்பு இல்லாததால் நடிக்கவில்லை அவர்கள் வினை, ஜீவன், பிரசன்னா, சிபிராஜ், விக்ரம் பிரபு, பரத்,போன்ற நடிகர்கள் உள்ளனர்.

Leave a Comment