நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என காத்திருந்து காத்திருந்து வயதாகிப்போன நடிகர்கள்.! அட லிஸ்டில் உங்களுக்கு பிடிச்ச நடிகர் இருக்காரா.!

90s காலகட்டத்தில் நடிகர்களாக நடித்து தற்போது வரையிலும் நடிகராகவே இருந்து வருபவர்கள் கமல் ரஜினி, அதேபோல் 90s  காலகட்டத்தில் நடிகராக நடித்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்கள் அதேபோல் ஒரு சில நடிகர்கள் வில்லனாகவும் மிரட்டி வருகின்றனர்.  ஆனால் 90s காலகட்டத்தில் ஹீரோவாக நடித்த ஒரு சில நடிகர்கள் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்காமல் ஹீரோவாக தான் நடிப்பேன் என மன வலிமையோடு இருந்து மண்ணை கவ்விய நடிகர்கள் யார் யார் என்று தற்போது நாம் பார்க்கிறோம்.

ராமராஜன்:- 70, 80 காலகட்டத்தில் சினிமாவில் புகழ்பெற்று விளங்கினார் நடிகர் ராமராஜன் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி தான் என்று சொல்ல வேண்டும். இவர் நடிகராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், இயக்குனர், அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்டு விளங்கினார். இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் நான்கு தியேட்டர்களில் நான் ஒரு நாட்களுக்கு மேல் ஓடியது இந்த திரைப்படம்.

அதன்பிறகு காலங்கள் மாற மாற இவருக்கு வாய்ப்பு இல்லாமல் போகவே. பின்னர் நடிகர் ராமராஜனுக்கு குண சித்திர வேடங்கள் அமைந்தது ஆனால் நடித்தால் நடிகராக மட்டுமே நடிப்பேன் என ஒற்றை காலையில் நின்றதால் வந்த குணச்சித்திர வேடங்களும் கைநழுவி போனது தற்போது எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார்.

கரண் :-  தமிழ் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் கரண். இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது கிட்டத்தட்ட 70 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 90களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் கமல் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் வில்லனாக நடித்திருப்பார்.

அதன் பிறகு தொடர்ந்து விஜய் கூட்டணியிலும் நடித்துள்ளார் பிரசாந்த் கூட்டணியிலும் நடித்துள்ளார் அதே போல் பல நடிகர்களுடன் சப்போர்ட்டிங் ரோலில் நடித்துள்ளார். அதே சமயம் குனச்சித்திற வேடங்களிலும் நடித்துள்ளார் வில்லனாகவும் நடித்துள்ளார் நடிகர் கரண். ஒரு கட்டத்தில் எத்தனை நாள் தான் சப்போர்ட்டிங் ரோலில் நடிப்பது என்று எண்ணி ஹீரோவாக அவதாரம் எடுத்தார் அப்படி அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் தான் கொக்கி இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பின்னர் கருப்புசாமி குத்தகைக்காரர் போன்ற சில திரைப்படங்களில் நடித்து கலையான விமர்சனங்களை பெற்றார். பத்திரிக்கையாளர் ஒருவர் இவருடைய  பட வாய்ப்பு குறைவதற்கு ஒரு நடிகை தான் காரணம் என்று கூறியிருக்கிறார். ரஜினிக்கு அம்மாவாகவும் தங்கையாகவும் நடித்த ஒரு நடிகையுடன் கரன் அவர்கள் தொடர்பில் இருந்ததாக அவர் கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் நடிகையுடன் முழு நேரத்தையும் செலவிடுவதால்  கரன் அவர்களுக்கு பட வாய்ப்பு இல்லாமல் போனது என்று கூறியுள்ளார்.

பிரசாந்த்:- தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயா நடித்து வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர்தான் நடிகர் பிரசாந்த். இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இவருடைய படங்கள் இருக்கும் ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் நானும் ஆக்சன் ஹீரோவாக மாறுகிறேன் என்று மாரி தனது பெயரை வீணாக்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் ஏதாவது ஒரு வாய்ப்பு அமையாதா என்று  காத்திருந்தார் ஆனால் இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை அதற்கு பதிலாக தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளியான வினைய விதைய ராமா என்ற திரைப்படத்தில் ஒரு சப்போர்ட்டிங் ரோல் தான் கிடைத்தது.

மேலும் ஷாம், மைக் மோகன், ஜீவன், அப்பாஸ், மனோஜ் பாரதிராஜா, பரத், ஜித்தன் ரமேஷ், இந்த அனைத்து நடிகர்களும் கம் பேக் கொடுக்க நினைத்து தற்போது வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

Leave a Comment