விஜயகாந்த், சரத்குமார் உடன் தளபதி விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.!

Actors Vijay and Sarathkumar: தளபதி விஜய், விஜயகாந்த் மற்றும் சரத்குமார் ஆகியவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வருகின்ற 19ஆம் தேதி அன்று லியோ திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது இதற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். லியோ படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கம் இருக்கும் தனது அடுத்த படத்தில் இணைந்து உள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க இருக்கிறது.

அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சரத்குமார் மற்றும் விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு அடுத்த தலைமுறைகாக விளங்கியவர் தான் விஜய். தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகராக தனக்கான அங்கீகாரத்தை பிடித்துள்ளார்.

விஜய்யை போலவே ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக கலக்கி வந்தவர் தான் நடிகர் சரத்குமார். சமீப காலங்களாக ஹீரோவாக இல்லை என்றாலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்து வருகிறார். அப்படி சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த போர் தொழில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

vijay and sarathkumar
vijay and sarathkumar

இதனை அடுத்து மேலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வருகிறார். இவ்வாறு பிசியாக இருந்துவரும் நடிகர் விஜய் மற்றும் சரத்குமார் இருவரும் விஜயகாந்த் உடன் விழா ஒன்றில் கலந்துக் கொண்ட பொழுது எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் மற்றும் சரத்குமார் தற்பொழுது வரையிலும் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் விஜயகாந்த் அரசியலில் ஈடுபட்டு வந்தார். தற்பொழுது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார்.