கமலஹாசன் படத்தில் ஒருமுறை கூட நடிக்காத நடிகர், நடிகைகள்.! லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது..?

உலகநாயகன் கமலஹாசன் திரை உலகில் 60 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். கமலஹாசன் கடைசியாக இயக்குனர் லோகேஷ் உடன் கைகோர்த்து விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்தார் மேலும் அந்த படத்தை துணிந்து தயாரித்தார் படம் ஒரு வழியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடியது.

இந்த படத்தில் கமலுடன் கைகோர்த்து பகத் பாசித், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், காயத்ரி, மைனா நந்தினி, ஏஜென்ட் டினா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் தொடர்ந்து திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருந்த விக்ரம் திரைப்படம் வசூலிலும் பட்டையை கிளப்பியது ஒட்டுமொத்தமாக அந்த திரைப்படம் சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து OTT தளத்திலேயும் வெற்றியை கண்டது இந்த படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் கமலுடன் கைகோர்த்து பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால்.

மற்றும் சமுத்திரகனி, சார்ஜ் மரியன், மனோபாலா மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர் இந்த படத்தை பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் திரையுலகில் பல நடிகர்களுடன் நடித்துள்ள உலகநாயகன் கமலஹாசன் ஒரு சில சிறந்த நடிகர் நடிகைகளுடன் மட்டும் இதுவரையிலும் அவர் சேர்ந்து நடிக்கவே இல்லை..

அந்த நடிகர்கள் யார் யார் என்பது குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம். கனகா, ரகுவரன், ரோஜா, நக்மா, நதியா மற்றும் விவேக் அவர்களுடன் மட்டும் கமலஹாசன் ஒருமுறை கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 2 படத்தில் முதல் முறையாக கமலும் நடிகர் விவேக்கும் இணைய இருந்தனர் ஆனால் அதுவும் நடக்காமல் போனது.

Leave a Comment