நடிகர்,நடிகைகளுக்கு இதற்கு மேல் இந்த முறையில் தான் சம்பளம் வழங்கப்படும் என அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்.!

பொதுவாக சினிமாவை பொருத்தவரை நடிகர்களுக்கு அதிக அளவில் சம்பளம் கிடைத்து வருகிறது மேலும் பல நடிகர்கள் தங்களுடைய ஒரு படத்திற்கு பல கோடி சம்பளமாக பெற்று வருகிறார்கள் மேலும் இவர்களுக்கு தேவையான அனைத்தையும் திரைப்படங்கள் தயாரிப்பவர்களை செய்து கொடுக்கிறார்கள்.அந்த வகையில் இதனால் ஒரு படம் தயாரிப்பதற்கு பல கோடிகள் செலவாகி வருகிறது.

ஏனென்றால் ஒரு தயாரிப்பு நிறுவனம் ஒரு பிரபல நடிகரை வைத்து படைத்தினை உருவாக்கி வருகிறார்கள் என்றால் அவர் அந்த படத்தில் இருந்து நீங்காமல் முழுமையாக நடித்துக் கொடுக்க வேண்டும் அவ்வாறு செய்யாமல் நடிகர்களிடம் ஏட்டா போட்டி செய்து வந்தால் அந்த நடிகர்கள் பாதியிலேயே சென்று விடுவார்கள். இதன் காரணமாக அனைத்தும் செய்தாக வேண்டும் என நிலைமையில் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்து வருகிறது.

ஒருபுறம் இருக்க நடிகர்கள் அளவிற்கு நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றாலும் ஒரு சில நடிகைகளும் பல கோடி சம்பளமாக பெற்று வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இவர்களுடைய சம்பளத்தை பற்றிய தகவலை தயாரிப்பாளர் சங்கம் சில அதிரடி முடிவுகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதாவது தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் செலவுகள் உயர்ந்து வருவதை கட்டுப்படுத்துவதற்காகவும் நடிகர்களின் சம்பளம் திரையரங்க டிக்கெட் கட்டணம், விபிஎம் கட்டணம், ஓடிடியில் படங்களை வெளியிடுவது உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தற்பொழுது பேசி முடிவு செய்துள்ளார்கள். இதனை பேசிவிட்டு தான் ஒரு படத்தினை தொடர வேண்டும் எனவும் கூறியுள்ளார்கள்.

அதாவது தற்பொழுது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கூறியதாவது, இனிவரும் காலங்களில் நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நாள் சம்பளம் கிடையாது என்றும் நடிகர்களின் ஊதியத்தில் அவர்களுக்கான பணியாளர்கள் செலவு, பயணச் செலவு, தங்கும் இடம்,சிறப்பு உணவுகள் ஆகியவை அடங்கும் எனவும் மேலேசொன்னவை எல்லாம் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூடுதலாக செய்ய முடியாது எனவும் இது தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பொருந்தும் எனவும் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

இது நடிகர்,நடிகைகள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் இவர்கள் தங்கும் இடம், சாப்பிடும் உணவு இவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தும் விலை உயர்ந்தது இவ்வாறு இவர்கள் கூறியது பெரிதும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment