நடிகர் சூரிக்கு இப்படி ஒரு மகன்,மகளா இணையத்தில் வெளிவந்த புதிய புகைப்படம்.!

ரசிகர்களின் மனதில் தனது காமெடி பதிய வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறையில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் நடிகர் தான் சூரி இவர் தமிழில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இணைந்து தனது காமெடி நடிப்பை இயல்பாக காட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.

மேலும் இவர் அஜித்,சூர்யா விஷ்ணு விஷால்,சிவகார்த்திகேயன்,சசிகுமார்,விமல் விஜய் போன்ற பிரபல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

இவ்வாறு பிரபலமடைந்த சூரி லாக்டவுன் சமயத்தில் எந்த திரைப்படத்திலும் தலை காட்டாமல் இருந்தார் அதன் பிறகு இவர் ஒரு சர்ச்சையை இணையதளத்தில் கிளப்பினார் அதில் நான் பணம் கொடுத்து ஏமாந்து விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து சூரியின் ரசிகர்கள் இவரது புகைப்படங்கள் ஏதாவது வெளிவருமா என காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

soori
soori

இந்த புகைப்படத்தில் சூரி தனது பைக்கில் மகன் மகளை வைத்து ஓட்டும் போது எடுத்த புகைப்படமாக தெரிகிறது மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment