மீண்டும் மீண்டும் பாலிவுட் நடிகருடன் கைகோர்க்கும் நடிகர் யோகிபாபு..! அதுவும் இந்த ஹீரோவுடனா..!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் யோகிபாபு இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தன்னுடைய அழகான கர்லிங் ஹேர் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அவர் பேச்சு திறணிலும் சிறந்தவர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் ,விஜய் சேதுபதி என பல நடிகர்களின் திரை படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அவர் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் இவர் ஹீரோவாக நடித்த கோலமாவு கோகிலா மற்றும் கூர்க்கா மண்டேலா ஆகிய பல்வேறு திரைப்படங்களும் மெகா ஹிட் அடித்தது மட்டுமில்லாமல் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. என்ன தான் ஹீரோவாக நடித்தாலும் சரி இன்று வரை காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டும் நிப்பாட்டியதே கிடையாது.

அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் அட்லி இயக்கும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமில்லாமல் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் யோகிபாபு நடிக்க உள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே யோகி பாபு சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்திருந்தார் இந்நிலையில் மீண்டும் தற்போது இணைய உள்ளதன் காரணமாக இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

yogibabu-2

Leave a Comment

Exit mobile version