பரபரப்பை ஏற்படுத்திய திரௌபதி நடிகையின் அடுத்த திரைபடம்.! அதுவும் இந்த முன்னணி நடிகருடனா

draupathi-actress
draupathi-actress

actor yogibabu joined with famous actress: முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தனியாக ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து இவர் தற்போது திரவுபதி திரைப்படத்தின் ஹீரோயினான ஷீலா உடன் இணைந்து மண்டேலா என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இதுகுறித்து நடிகை ஷீலா பேசுகையில் இந்த திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இந்த கதாபாத்திரத்தின் மூலம் இவர் மீண்டும் பேசப்படுபவர் எனவும் கூறியுள்ளார்.

ஷீலா இதற்குமுன் திரவுபதி, டூயட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் லீடிங் ரோலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

sheela-1
sheela-1