சினிமாவையும் தாண்டி சீரியலில் நடித்த நடிகர் விமல்.! அதுவும் இந்த சூப்பர் ஹிட் அடித்த சீரியலில்.? வைரலாகும் புகைப்படம்.

0

தமிழ் சினிமாவில் பல்வேறு சிறப்பான திரைப்படங்களை கொடுத்த விமல் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்றுவரை முடியாமல் போராடி வருகிறார் ஆனால் இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியதோடு பலரையும் கவர்ந்த திரைப்படமாக இருக்கிறது.

அந்த வகையில் பசங்க, களவாணி, தூங்காநகரம், வாகை சூடவா போன்ற திரைப்படங்கள் விமலுக்கு பேரையும், புகழையும் பெற்றுத்தந்தது அதிலும் குறிப்பாக வாகை சூடவா படத்தில் தனது மாறுபட்ட நடிப்பை விமல் கொடுத்து இருந்தார்.

திரை உலகில் வெற்றி கண்டு வரும் விமல் ஆரம்ப காலகட்டத்தில் இவர் பல்வேறு வெள்ளித்திரை சினிமாவில்  குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் ஒரு சைடு ரோல் நின்று நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக இவர் விஜயின் கில்லி குருவி போன்ற படங்களில் சைடு ரோல்களில் நின்று நடித்திருப்பார்.

அதன் பிறகுதான் தனது திறமையை வளர்த்துக் கொண்டே படிப்படியாக முன்னேறினார். அது கூட பரவாயில்லை வெள்ளித்திரையில் தாண்டி இவர் சின்னத்திரை பக்கத்திலும் சீரியல்களில் நடித்துள்ளார் விமல்.

இச்செய்தி தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது விஜய் டிவியில் 9:30 மணிக்கு ராதிகாவின் நடிப்பில் ஒளிபரப்பான சித்தி சீரியலில் விமலும் நடித்திருந்தார். அந்த சீரியலில் நடிக்க போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் டிரெண்ட்டாகி வருகின்றன. இதோ நீங்களே பாருங்கள்.