பல பேருக்கு முன்மாதிரியாக இருக்கும் அஜித்தை அசர வைத்த நடிகர்.? ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த தரமான சம்பவம்

அஜித்குமார் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா உலகில் தன்னுடைய திறமை மற்றும் கடின உழைப்பின் மூலமாக உள்ளே நுழைந்தார் அதன் பிறகு ஆக்சன் மற்றும் காதல் படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு..

இந்த திரைப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இன்று பலருக்கும் முன்மாதிரியாக இருக்கும் அஜித் ஒரே ஒரு நடிகரை பார்த்து வியந்து உள்ளார் மேலும் அவரிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

முதலை கிட்ட மாட்டிகிட்டா தப்பிக்கவா முடியும்.. கமல், விஜய், சூர்யாவை ஒரே நேரத்தில் காலி பண்ணிய விஜயகாந்த்.!

2001 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் அசோகா. இந்த திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி ஹிந்தி மற்றும் தமிழில் வெளியானது. ஷாருக்கான் உடன் இணைந்து அஜித் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.

நீங்கள் ஏன் ஷாருக்கான் நடித்த படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தீர்கள் என அப்பொழுது செய்தியாளர்கள் கேட்க கேள்விக்கு அஜித் சொன்ன பதில் இதுதான்.. வாலி படம் முடிந்ததும் சந்தோஷ் சிவன் இந்த கதையை என்னிடம் சொல்லி ஒரு சிறிய வேடத்தில் நடிக்க சொன்னார். அந்த கதாபாத்திரம் எனக்கும் பிடித்திருந்தது அதோட ஷாருக்கான் எனக்கு மிகவும் பிடிக்கும்..

நாலா பக்கமும் கொட்டும் பணம்.. கேப்டன் விஜயகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

அவருடன் நடிப்பது நல்ல அனுபவமாக இருக்கும் என நினைத்தேன் அதேநேரம் அந்த படத்தில் அனுபவத்தையும் தாண்டி ஷாருக்கான் உடன் நிறைய கற்றுக் கொண்டேன் அவர் எவ்வளவு பெரிய ஸ்டார் ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவரின் காட்சி முடிந்தாலும் மற்ற வேலைகளை சுறுசுறுப்பாக செய்வார்.

அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது அவர் சுறுசுறுப்பாக இருப்பதால் மொத்த யூனிட்டுமே சுறுசுறுப்பாக இயங்கும் இந்த விஷயத்தை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என அஜித்தே சொல்லி உள்ளார்.

Exit mobile version