சினிமாவில் உச்சத்தில் இருந்து திடீரென காணாமல் போன நடிகர்கள்.!! இதோ லிஸ்ட்.

0

actor who are all high peak in the beginning and suddenly fall down: தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவிலேயும் பல நடிகர்கள் உச்சத்தில் இருந்து திடீரென காணாமல் போய்விடுவார்கள், அப்படி தமிழ் சினிமாவிலும் பல நடிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் சில நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

பிரசாந்த் – தற்பொழுது உள்ள ரசிகர்கள் தல தான் அடுத்த சூப்பர் ஸ்டார், தளபதி தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு காலகட்டத்தில் அஜித் மற்றும் விஜய்யை ஓவர்டேக் செய்து ஒற்றை ஆளாய் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் பிரசாந்த், ஆனால் இவரின் நேரங்காலாமோ என்னமோ தன்னுடைய வீட்டுப் பிரச்சனை கதையை தேர்ந்தெடுப்பதில் ஆகியவைகளால் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டு விட்டார்.

ஷாம் – ரசிகர்களின் மனதில் காதல் நாயகனாக வலம் வந்தவர் ஷாம், இவர் பல வெற்றிப் படங்களைக் கொடுக்க வில்லை என்றாலும் ஓரளவு வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் காதல் நாயகனாக வலம் வந்தார். ஆனால் பெரிய நடிகராக வளர முடியாமல் தட்டுத்தடுமாறி தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரின் நிலைமை இப்படி மோசமாகிவிட்டது.

மைக் மோகன்- ரஜினி, கமல் என அனைவரையும் வெற்றிகளையும் சர்வ சதாரணமாக ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஹீரோவாக வலம் வந்தவர் மைக் மோகன். இவர் பாட்டு பாடி பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அதனால் இவருக்கு மைக் மோகன் என பெயர் வந்தது, இவர் திரைப்படத்தில் மாஸ், ஆக்ஷன், டான்ஸ் என எதுவுமே இல்லாமல் சாதாரண காதல் திரைப்படங்கள் மூலமாகவே விவேகமான ரசிகர்களை கவர்ந்தார், ஆனால் அவருடன் நடித்த நடிகை ஒருவர் மோகன் கிடைக்காத விரக்தியில் இவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறி அவரது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

ஸ்ரீகாந்த்- நடிகர் ஸ்ரீகாந்த் ஆரம்பத்தில் சில வெற்றிப் படங்களை கொடுத்து ஆஹா, ஓஹோ என வருவார் என அனைவரின் மனதிலும் நம்பிக்கையை ஊட்டியவர், ஆனால் ஊரார் பேச்சைக் கேட்டுக் கொண்டு மாஸ் ஹீரோவாக மாறவண்டும் என நினைத்து நடித்த சில படங்கள் ஊத்திக் கொண்டதால் பிறகு இவரை சினிமாவே ஒதுக்கி வைத்து விட்டது.

அப்பாஸ்- 90 களில் பல இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் தான் அப்பாஸ், சைலண்டாக இருந்துகொண்டு சத்தமே இல்லாமல் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார், அதன் பிறகு இவருக்கு சரியான பட வாய்ப்பு அமையாததால் குணச்சித்திர வேடங்களிலும் கழிவறை கழுவும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார்.

அதேபோல் நடிகர் ராம்கி தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் பின்பு தொடர்ச்சியாக தோல்வி திரைப்படங்களை கொடுத்து. சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார்,

பாண்டியராஜன் – குள்ளமாக இருந்தாலும் உயரத்திற்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என நிரூபித்து காட்டியவர் பாண்டியராஜன் தான். இவர் நடித்த ஆண்பாவம் திரைப்படங்களை இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தால் கூட வயிறு குலுங்க சிரிக்க பார்ப்பார்கள். ஆனால் இவர் ஒரு காலகட்டத்தில் சொதப்பியதால் சினிமாவை விட்டு வெளியே சென்றுதான் ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

ராமராஜன் – எம்ஜிஆருக்கு பிறகு அதிக மக்களால் ரசிக்கப்பட்ட ஹீரோ என்றால் அது ராமராஜன் தான். இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அதுவும் செண்பகமே என்ற பாடலை கேட்டால் அப்பொழுது உள்ள ரசிகர்கள் மெய்மறந்து இந்த பாடலை கேட்பார்கள். அந்த அளவு இவர் உயரத்தில் இருந்தவர், ஆனால் அரசியல் ஆசையால் இவர் சினிமாவுக்கே வேட்டு வைத்துக் கொண்டார், அதன்பிறகு குணச்சித்திர வேடங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அனைத்து வாய்ப்பையும் ஒதுக்கிவிட்டார்.