வெறும் 1000 ரூபாய்காக தர லோக்கலாக இறங்கி சண்டை போட்ட நடிகர் விவேக்..! எதற்காக தெரியுமா..?

vivek-01
vivek-01

பொதுவாக சினிமா பிரபலங்களில் உதவி செய்வதில் எம்ஜிஆர்க்கு பிறகு  ஒரு நல்ல உள்ளம் கொண்ட நடிகர் என்றால் அவர் விஜயகாந்த் தான் அவர் தன்னிடம் உதவி என்று எவரேனும் வந்தால் போதும் அவருக்கு தன்னால் முடிந்த வரை போதிய உதவியை செய்து கொடுப்பார் ஆனால் இதே போன்ற பல பிரபலங்களும் உதவி செய்து வருகிறார்கள் ஆனால் அவர்களை பற்றி நமக்கு பெரும் அளவு தெரிவது கிடையாது.

அப்படிதான் நடிகர் வடிவேலும் தன்னை நாடி வருபவர்களுக்கு தகுந்த உதவியும் வாய்ப்பையும் கொடுத்து வருகிறார் ஆனால் அவரையே இந்த செயலில் ஓரம் கட்டிய நடிகர் என்றால் விவேக் தான் இவர் தற்பொழுது இந்த உலகில் இல்லாவிட்டாலும் அவருடைய நகைச்சுவை மூலமாக ரசிகர்களின் கண்களில் தென்பட்டு கொண்டுதான் இருக்கிறார்.

அந்த வகையில் இவருடைய மறைவிற்கு பிறகாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் என்றால் அது அண்ணாச்சி நடிப்பில் வெளியான லெஜெண்ட் என்ற திரைப்படம் தான் பொதுவாக நடிகர் விவேக் அவர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் சரி  தன்னுடைய மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் தான் செய்து வருவார் அந்த வகையில் சக நடிகர்களின் குழந்தைகளின் படிப்பிற்கு தேவையான செலவு வீடு கஷ்டத்தை போக்குவது மேலும் பல நடிகர்களை ஊக்குவிப்பது.

அந்த வகையில் காதல் சடுகுடு திரைப்படத்தில் தன்னுடன் நடித்த காமெடி நடிகர்களுக்கு தகுந்த சம்பளம் கொடுக்கவில்லையாம் அப்பொழுது வெறும் ஆயிரம் ரூபாய் தான் சம்பளமாம் அதைக் கூட அவர்கள் கொடுக்காமல் பட குழுவினர்கள் ஏமாற்றி விட்டார்கள் இந்த விஷயம் விவேக்குக்கு தெரிந்தவுடன் அவர்களிடம் சண்டை போட்டு அந்த சக நடிகர்களுக்கு அந்த ஆயிரம் ரூபாயை வாங்கி கொடுத்தாராம்.

இவ்வாறு இந்த நிகழ்வு சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய காமெடி நடிகர் முத்துக்காளை என்பவர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதனை தொடர்ந்து தான் விவேக்கின் அந்த நல்ல மனம் தெரியவந்துள்ளது.