அஜித் ரசிகர்கள் இதை மட்டும் செய்யட்டும் அப்பறம் பாரு என்ன நடக்குதுன்னு.! பிரபல நடிகர் அதிரடி

1998ஆம் ஆண்டு தல அஜித் அவர்கள் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த படம் காதல் மன்னன். இப்படத்தில் காமெடியனாக நடிகர் விவேக் அவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். 1997 ஆண்டு பகவான் திரைப்படத்தில் இவர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் தொடர்ந்து முகவரி, ஆழ்வார், உன்னைத்தேடி, பூவெல்லாம் உன் வாசம், என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற பல படங்களில் நடித்துள்ளனர்.சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த விசுவாசம் என்ற திரைப்படத்தில் இவர்களது காம்பினேஷன் சிறப்பாக இருந்தது அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

விவேக் காமெடியனாக மட்டுமல்லாமல் பொது சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவராக விளங்கிவருபவர். அப்துல் கலாம் அவர்களின் விசுவாசி என்று கூட இவரைக் கூறலாம்.

சமிபத்தில் விவேக் அவர்கள் தாராள பிரபு ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விவேக்கிடம் ரசிகர் ஒருவர் பெரிய பிரபலங்கள் ஒருவருக்கு சவால் விடுவிர்கள் என்றால் யாருக்கு விடுவிர்கள் என கேட்டதற்கு பதிலளித்த விவேக். தல அஜித்க்கே, தன்னுடைய ரசிகர்கள் ஒவ்வொருவரையும் மரம் நட சொல்ல வேண்டும் என்பதுதான் இந்த சவால் எனக் கூறினார்.

pics
pics

அஜித் அவர்கள் வாயால் கூட கூற வேண்டாம் வழக்கம்போல் அறிக்கையை வெளியிட்டாலே. இதனை அவரது ரசிகர்கள் செய்வார்கள் என அவர் கூறினார். அவர் கூறியது அஜித்துக்காக உயிரை கொடுக்கும் ரசிகர்கள் மரம் நட மாட்டார்களா, பொருத்திருந்து பாருங்கள் எனவும் தெரிவித்தார்.

Leave a Comment