அப்துல் கலாம் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டு ட்விட் போட்டுள்ள நடிகர் விவேக்.!!

Actor Vivek has tweeted to apologize to Abdul Kalam: ஐக்கிய நாடுகள் சார்பில் 1974 ஆம் ஆண்டு முதல் ஜூன் 5 ஆம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் நாம் வாழும் இந்த உலகத்திற்கு நம்மால் முடிந்ததை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் மரங்களை நடுவது, இயற்கையை பாதுகாப்பது, தூய்மைப் படுத்துவது போன்ற செயல்களை செய்வது வழக்கம்.

இந்நிலையில் தற்போது கொரானா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று ஜூன் 5 இந்த நாளில் நடிகர் விவேக் ஐயா அப்துல்கலாம் அவர்களுடன் இணைந்து வழக்கமாக சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நடுவார் என்பது நாம் அறிந்ததே.

இவர் செய்வது மட்டுமல்லாமல் இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை மரக்கன்றுகள் நடுமாறு ஊக்குவித்து வருவார். அதுமட்டுமல்லாமல் இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருவார். இப்படி அனைவரும் தங்களால் முயன்றதை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் செய்து வந்தால் நிச்சயம் நன்மை பயக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதவில் “இன்று ஜூன் 5, பொதுவாக இந்த நாளில் நான் பல இடங்களுக்கு சென்று மரக்கன்றுகளை நடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தற்போது நிலவும் ஊரடங்கால் அது முடியாமல் போனது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அய்யா அப்துல்காலம் அவரிடம் தன்னை மன்னிக்குமாறும் அடுத்த வருடத்திலிருந்து மீண்டும் தொடங்குவேன் என்றும் கூறியுள்ளார்.”

Leave a Comment

Exit mobile version