தனுஷின்தனுஷின் “கர்ணன்” படத்திற்கு இப்படி ஒரு வித்தியாசமான கமெண்ட் கொடுத்த நடிகர் விவேக்.! நீ வேற லெவல் தலைவா என கூறிய ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் சிறந்த கதையம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய நடிகர்களில் தற்போது முதன்மையானவராக பார்க்கப்படுபவர் நடிகர் தனுஷ்.

இவர் நடிக்கும் ஒவ்வொன்றும் மாபெரும் ஹிட் அடிப்பதோடு, தேசிய விருதும் கைப்பற்றுவார் இதனால் இவருக்கு இணை தற்போது யாரும் இல்லை என்கிற அளவுக்கு உயர்ந்துள்ளார்.

அசுரனின் ஹிட் படத்தை தொடர்ந்து இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தை பலர் எதிர்பார்த்திருந்தனர் இந்த திரைப்படமும் அவருக்கு மாபெரும் ஹிட் படமாக அமைந்ததோடு தனுஷ் கேரியரில் மிகப்பெரிய பெஸ்ட் படமாகவும் அமைந்துள்ளது.

அசுரன் படத்தை விட பல மடங்கு இந்த படமும் வசூல் வேட்டை நடத்தும் என படத்தை பார்த்த பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை கூறினார் மேலும் தனுஷிற்கு இது இன்னொரு தேசிய விருதையும் கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

படத்தை பார்த்த பலரும் கமெண்ட்டுகளை கூறிவந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் விவேக் இந்த படம் குறித்தும் தனுஷ் குறித்தும் தனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அதில் அவர் கூறியது.

எப்பவாவது ஹிட் கொடுத்தாக ஓகே எப்பொழுதுமே ஹிட் கொடுத்தால் என்ன தனுஷ் என விளையாட்டாக பதிவிட்டார். மேலும் கர்ணன் பட குழுவுக்கும் தனது வாழ்த்துக்களை  தெரிவித்தார்.

Leave a Comment