படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் விவேக்.! எந்த படத்தின் போது தெரியுமா.. அனைவரையும் அழவைக்கும் வீடியோ.

சினிமாவில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியவர் மறைந்த நடிகர் விவேக்.  தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, அஜித், விஜய் போன்ற டாப் நடிகர்களுக்கு துணையாக நடித்து அத்தகைய படங்களுக்கு வெற்றிக்கு உதவிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் முன்னணி நடிகருக்கு ஈடு இணையாக நடித்து தனது திறமையை வெளிக்காட்ட கூடியவர். அதேசமயம் திரை உலகில் எந்த ஒரு கெட்ட பெயரும் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களை சிரிக்க வைத்து அழகு பார்த்த வந்த விவேக் சில தினங்களுக்கு முன்பு இறந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அவர் இல்லை என்றாலும் அவர் சொல்லிக் கொடுத்ததை செய்ய அவரது ரசிகர்கள் மற்றும் மக்களும் பின்பற்றுவார்கள் என்பது தெரியும் ஏனென்றால் அந்த அளவிற்கு பல விழிப்புணர்வு மற்றும் சமூக அக்கறைகளை அனைவருக்கும் வாரி வழங்கியவர்.

இப்படி பல உதவிகளையும், நல்லதையும் செய்துவந்த விவேக்க்கு ஒரு சில ஆசைகள் நிறைவேறாமல் இருந்தது அதில் ஒன்று டாப் நடிகரான கமலுடன் எப்படியாவது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என அவரிடமே கேட்டுள்ளார். அந்த வகையில்தான் இந்தியன் 2 படவாய்ப்பை கமல் அவருக்கு வழங்கினார்.

ஆனால் இந்த படம் முழுமையாக நிறைவு பெறாமல் சில விபத்துகள் காரணமாக தள்ளிப்போனது எது எப்படியோ கமலுடன் கொஞ்சமாவது நடித்து  தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.மேலும் இந்தியன் 2 படத்தில் விவேக்கிற்கு முக்கிய கேரக்டர ஷங்கர் கொடுத்தார் இதுகுறித்து கமல் சமீபத்தில் வீடியோவும் வெளியிட்டு குறிப்பிடுகின்றார்.

இந்தியன் 2 ஷூட்டிங் பார்ட்டின் போது நடிகர் விவேக் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்பொழுது அவருடன் இயக்குனர் சங்கர், பாபி சிம்ஹா மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அருகில் இருந்தனர் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.

அந்த வீடியோவை பார்க்கும் பொழுது பலருக்கும் கண் கலங்குகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment