நான் சொன்ன விஷயமே வேற.. விவாகரத்து லெவலுக்கு ஊதி விட்டார்கள் – விஷ்ணு விஷால் ட்வீட்

vishnu vishal
vishnu vishal

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ விஷ்ணு விஷால் இவர் எப்பொழுதுமே வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பது வழக்கம் அப்படி இவர் நடித்த ராட்சசன், கட்டா குஸ்தி, வெண்ணிலா கபடி குழு என சொல்லிக்கொண்டே போகலாம்..

அந்த அளவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.  இப்பொழுது கூட ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து பல்வேறு புதிய படங்களிலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி திரை உலகில் இருக்கும் விஷ்ணு விஷால் அண்மையில் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டு பெறும் பரபரப்பை கிளப்பினார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்.. நான் மறுபடியும் முயற்சி செய்தேன் மறுபடியும் தோற்றுவிட்டேன் நான் பாடம் கற்றுக் கொண்டேன்.. போன முறை தோல்வி அல்ல என் தவறும் அல்ல அது துரோகம்..

என ட்விட் செய்திருந்ததை பார்த்த நெட்டிஷன்கள் இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டாய விவாகரத்து செய்யப் போகிறார் என பெரிய வதந்தியை கிளப்பி விட்டனர் இதற்கு தற்போது விளக்கம் கொடுத்து உள்ளார் நடிகர் விஷ்ணு விஷால் அதில் அவர் சொன்னது.. Professional விஷயம் பற்றி தான் குறிப்பிட்டேன் சொந்த வாழ்க்கை பற்றி பேசவில்லை என தெரிவித்துள்ளார்..

ஒவ்வொருவரும் நாம் கொடுக்கும் பெரிய கிப்ட் trust என்பதுதான் ஆனால் தோற்றுவிட்டால் நாம் நம்மையே குறை சொல்லிக் கொள்கிறோம் அவ்வளவு கடினமாக இருக்கத் தேவையில்லை இதை தான் நான் சொல்ல வந்தேன் என நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.