சிம்புவின் கேரியரையே குளோஸ் செய்த இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் விஷால்..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முக திறன் கொண்டவர் தான் நடிகர் விஷால் இவ்வாறு பிரபலமான நமது நடிகரை புரட்சி தளபதி என பட்டப்பெயர் வைத்து ரசிகர்கள் அழைப்பது வழக்கம் தான் அந்த வகையில் நடிகர் விஷால் தென்னிந்திய சினிமாவின் நடிகர் சங்க செயலாளரும் கூட.

மேலும் இவர் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்ற காரணத்தினால் நடிகர் விஷால் இரண்டு சங்கங்களிலும் முக்கிய பொறுப்பில் இருந்து பணியாற்றி வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது இருபத்தி ஒன்பது திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் திரையில் முதன்முதலாக பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ஜாடிக்கேத்த மூடி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

இதனைத் தொடர்ந்து அவர் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கால்தடம் பதித்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துவந்த நடிகர் விஷால்  இரும்புத்திரை திரைப்படத்திற்கு பிறகு ஆக எந்த ஒரு வெற்றி திரைப்படத்தையும் கொடுக்கவில்லை.

அந்த வகையில் சமீபத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்த எனிமி என்ற திரைப்படம் கூட ஓரளவு மட்டுமே வெற்றியை கொடுத்தது. அந்த வகையில் தற்போது விஷால் அவர்கள் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

vishaal.jpg-1
vishaal.jpg-1

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் ஏற்கனவே சிம்புவை உடல் எடையைக் கூட்ட சொல்லி அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் தோல்வியை கொடுத்தது மட்டுமில்லாமல் சிம்புவின் கேரியரே அழித்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது விஷால் அந்த இயக்குனருடன் கூட்டணி வைத்ததன் காரணமாக ரசிகர்கள் பலர் அச்சத்தில் உள்ளார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment