ஷூட்டிங் ஸ்பாட்டில் கோபமாக நடந்து கொண்ட நடிகர் விஷால் – பார்த்தும் அலறி அடித்துக் கொண்டு ஓடிய இளம் நடிகை.! நடந்து என்ன..

vishal

நடிகர் விஷால் அண்மை காலமாக ஆக்சன் திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய திரைப்படங்கள் தோல்வியை தழுவி இருப்பினும் அடுத்ததாக லத்தி என்னும் ஆக்சன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை வினோத்குமார் இயக்கி உள்ளார் ராணா புரோடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது லத்தி படத்தில் விஷாலுடன் கைகோர்த்து சுனைனா, பிரபு மற்றும் பலர் நடித்து உள்ளனர் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று கோளாக்காலமாக அரங்கேறியது இதில் எஸ் ஜே சூர்யா, சுனைனா, விஷால், உதயநிதி ஸ்டாலின், ரோபோ சங்கர், சூரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டது.

நடிகர் சூரி மற்றும் ரோபோ சங்கர் மேடையில் விஷாலுடன் இணைந்து பேசிக் கொண்டிருந்தனர் அப்பொழுது ஒரு சுவாரஸ்யமான தகவலையும் பகிர்ந்து கொண்டனர். விஷாலும் நானும் சக்ரா படத்தின் படப்பிடிப்பு தளத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது நடிகை ஸ்ருஷ்டி வந்தார்.

ரோபோ ஷங்கரும் விஷாலும் சின்னதா ஒரு டிராமா போடுவோமே என கூறி பேசிக்கொண்டனர் பின் ரோபோ ஷங்கரை இரண்டு முறை அரைவிட்டார். அங்கிருந்து யூனிட்டே அமைதி ஆயிடுச்சு நானும் அழுத மாதிரி நடிச்சேன் உடனே நடிகை ஸ்ருஷ்டி டாங்கே எனக்கு டிக்கெட் புக் பண்ணுங்க நான் கிளம்புகிறேன் என்று பயந்து, என்னங்க படத்தில் நடிக்க வருகிறவர்களை அடிக்கிறாரு என நடுங்கி விட்டார்.

vishal-
vishal-

பின் அந்த நடிகை இடம் ரோபோ சங்கர் உண்மையை கூறி சமாதானப்படுத்தினாராம். இதனை மேடையில் ரோபோ சங்கரும் விஷாலும் ஞாபகப்படுத்தினர். விஷால் இது போன்று படப்பிடிப்பு தளத்தில் காமெடி பண்ணுவது ரொம்ப பிடிக்குமாம் எனவும் ரோபோ சங்கர் சொன்னார்.