நடிகர் விஷால் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா.! வைரலாகும் புகைப்படம்..

Actor Vishal: தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஷாலி அம்மாவை பெரிதாக யாராலும் பார்த்திருக்க முடியாது. தற்பொழுது ட்விட்டர் பக்கத்தில் விஷால் தனது அம்மா அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விஷால் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு ஹிட் அடிக்காமல் இருந்து வரும் நிலையில் தற்பொழுது மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்க் ஆண்டனி படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இப்படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ்.கே  சூர்யா நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தினை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் தன்னுடைய 34வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஷால் பிரபல தயாரிப்பாளர் ஜிகே ரெட்டி மற்றும் ஜானகி தேவி தம்பதியினருக்கு பிறந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். விஷாலின் தந்தையை ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருந்தாலும் அவருடைய அம்மாவை யாருக்கும் பெரிதாக தெரியாது.

இந்நிலையில் தனது பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஷால் அதில் அவருடைய அம்மாவின் புகைப்படத்தை பலரும் பார்த்திருக்க முடியாது என்றும் தனது அப்பா மற்றும் அம்மாவுடன் பிறந்த நாள் அன்று எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படத்தை என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Exit mobile version