தமிழ் சினிமாவில் 2005ஆம் ஆண்டு திரைக்கு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் கற்க கசடற இத் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விக்ராந்த்.
இவர் விஜயின் தம்பி என்ற ஆதரவோடு சினிமாவிற்கு அறிமுகமானார். நடிகர் விக்ராந்த் விஜய்யின் சித்தப்பா மகன் ஆவார்.
இவர் என்னதான் விஜய்யின் தம்பியாக இருந்தாலும் இவருடைய தனித்திறமை ஆனால் சினிமாவில் இருக்கின்ற ஒரு இடத்தைப் பிடித்தார்.
பிறகு 2010ஆம் ஆண்டில் சினிமாவிற்கு வெளிவந்த கோரிப்பாளையம் திரைப்படம் இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
நடிகர் விக்ராந்த் மானசா என்பவரை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருடைய மனைவி வேறுயருமில்லை சன் டிவியில் ஒளிபரப்பான உதிரிப்பூக்கள் சீரியலில் நடித்திருந்தவர் தான். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் மக்களுடே அம்மே சீரியலிலும் நடித்துள்ளார்.
விக்ராந்த் மாமியாரும் பழைய நடிகை கனகதுர்கா ஆவார். நடிகை கனகதுர்க்கா நடித்த காலகட்டத்தில் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் விஜயின் அம்மாவின் தங்கையான சீலாவும் பழைய நடிகை ஆவார். இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார்.
