நடிகர் விக்ரம் சீரியல் மூலம் தனது பயணத்தை தொடங்கி, 1990 ஆம் ஆண்டில் ‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து இவர் நடித்த மீரா திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வெற்றியை தேடிக் கொடுத்தது, அதன் பிறகு பல மலையாள திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
அதே போல் தமிழில் அஜித் நடித்த உல்லாசம், பாலாவின் சேது ஆகிய திரைப்படம் இவர் சினிமா பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்களாகும், அதன்பிறகு பிதாமகன், சாமி, அந்நியன் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார், தற்பொழுது இவர் கடாரம் கொண்டான் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அதேபோல் விக்ரமிற்கு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள், இவரின் மகன் அர்ஜுன் ரெட்டி என்ற தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார், விக்ரமிற்கு 1992 இல் திருமணம் முடிந்து விட்டது, விக்ரம் ஷைலஜா பாலகிருஷ்ணன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்,

ஷைலஜா கேரளாவில் இருக்கும் பள்ளி ஒன்றில் உளவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தில் மனநலம் குன்றியவராக நடித்திருப்பார் அதை விக்ரம் மனைவி தான் அவருக்கு சொல்லிக் கொடுத்தாராம். மேலும் விக்ரமிற்கு அக்ஷிதா என்ற மகள் இருக்கிறார் இவருக்கு 2017 ஆம் ஆண்டு தான் திருமணம் ஆனது.
